Sunday, January 4, 2009

ரேப்பிட்லைப்ரரி.காம்

rapidshare பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். அதிலுள்ள கோப்புகளை தேடுவதற்கு இந்த rapidlibrary.com உதவும்.

Saturday, December 13, 2008

தமிழ்குடும்பம்.காம்

தமிழ் குடும்பம்.காம் உலகில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் உபயோகமான வாழ்க்கை குறிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளவே இந்த இணயதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள், காலத்தால் அழியாத நல்ல விஷயங்களை சொல்லிச்சென்றிருந்தாலும், விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் வாய் வழியாகவே சொல்லப்பட்டு ஒரு சில குடும்பங்களிலேயே தங்கி விடுவதுண்டு. அதனால் தான் ஒரு வீட்டில் இருக்கும் வாழ்க்கை குறிப்புகள் அடுத்த வீட்டில் இருப்பதில்லை வைரங்கள் போன்ற அந்த நல்ல குறிப்புகளை தமிழ் மக்களிடமிருந்து பெற்று உலகிற்க்கு பறைசாற்றவே தமிழ்குடும்பம்.காம் உருவாக்கப்பட்டுள்ளது.
http://www.tamilkudumbam.com/

அறுசுவை.காம்

சுரக்காய் சாறு (ஜூஸ்) தேடி இந்த வலைதளத்தை சென்றைடைந்தேன். கடைசியில் சுரக்காய் ஜூஸ் பற்றி தகவல் இல்லை!. இருந்தாலும் மற்ற உணவு தகவல்கள் அருமையிலும் அருமை. என் போன்று சமைக்க தெரியாதவர்களுக்கு நல்ல வலைதளம்.

http://www.arusuvai.com/tamil/
போய்ப்பாருங்கள் ருசிக்காமல் விடமாட்டீர்கள்!

Thursday, November 20, 2008

யோக்சந்தேஷ்

http://www.divyayoga.com/

தரமான யோக பத்திரிக்கை படிக்க விரும்புவோர் யோகி சுவாமி ராம்தேவ்ஜியின் யோக்சந்தேஷ் (Yog Sandesh) பத்திரிக்கை பயனுள்ளதாக இருக்கும். இது ஒரு மாத பத்திரிக்கையாகும், மாத மாதம் முதல் வாரம் இது உங்களுக்கு பதிவிறக்கத்திற்கு கிடைக்கும். (http://www.divyayoga.com/YogSandesh.zip)

மற்ற பகுதிகளும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

சிலைடுஷேர்

http://www.slideshare.net/
வெஜிடேரியன் பற்றி தேடுகையில் இந்த முகவரி சிக்கியது. அருமையான பதிவுகள் வைத்திருக்கிறார்கள். தரமான ppt presentation (இதற்கு தமிழ் பதம் என்ன?, யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்) பல துறை விசயங்கள் இருக்கிறது. ஒரு எட்டு எட்டி பார்த்துவிடுங்கள். உபயோகமாக இருக்கும்.

ஆர்க்கைவ்

http://web.archive.org

புத்தரையும் , ஜெயினையும் தேடிக்கொண்டிருக்கையில் இந்த வலை கிடைத்தது. ஓஷோவின் பக்கங்களில் புத்தரையும் ஜென்னையும் பற்றி நிறைய விசயங்கள் படிக்க முடிந்தது.

இந்த வலைதளத்தில் உ-ம் http://osho.org என கொடுத்தால் அதன் பழைய பக்கங்கள் அனைத்தும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. பழையன கழிக்கப்படாமல் புத்தம் புதிதாக பக்கங்கள் அனைத்தும் அப்படியே இருக்கிறது. வேறு ஏதுனும் பக்கங்களை நீங்கள் சோதித்துபாருங்களேன்.